முதன்மை பக்கம் > செய்திகள் > தகவல் தொழில்நுட்பம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டி.சி.எஸ். காலாண்டு லாபம் உயர்வு!  Search similar articles
முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் 7 விழுக்காடு அதிகரித்து ரூ.1290.61 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டு முடிவில் நிகர லாபம் ரூ.1202.93 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 25% அதிகரித்து ரூ.6,530.34 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மொத்தம் 12 புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது டி.சி.எஸ். இதில் 3 ஒப்பந்தங்கள் 75 முத‌ல் 100 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் ஆகும்.

பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இடைக்கால டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
பிரிட்டன் நிறுவனத்தை வாங்குகிறது ஹெச்.சி.எல்.!
சென்னையில் மடிக்கணினி கண்காட்சி
ப‌ரிசோதனை‌யி‌ல் லினக்ஸ் செல்பேசிகள்!
குறைந்து வரும் சைபர் கஃபேக்கள்!
கூடுதல் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கு தொகை வசூலிக்கப்படும்!
மடிக்கணினிகள் விற்பனை பெருக்கம்!