முதன்மை பக்கம் > செய்திகள் > தகவல் தொழில்நுட்பம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மடிக்கணினிகள் விற்பனை பெருக்கம்!  Search similar articles
இந்தியாவில் மடிக்கணினிகள் சந்தை 114 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. 2007- 08-ம் ஆண்டு 1.8 மில்லியன் மடிக்கணினிகள் விற்றுள்ளன.

மொத்த கணினி விற்பனையில் மடிக்கணினி விற்பனைகள் 25 விழு‌க்காடு பங்களித்துள்ளதாக மெய்ட் தொழிற்துறை விற்பனை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதே ஆண்டில் கணினி மற்றும் மடிக்கணினி விற்பனைகள் சேர்ந்து 7.34 மில்லியன் யூனிட்டுகள் விற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 16 விழுக்காடு அதிகம். கணினி விற்பனை மட்டும் 1 விழு‌க்காடு அதிகரித்துள்ளது.

அடுத்த நிதியாண்டிலும் மடிக் கணினி விற்பனை 65 விழுகாடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2007- 08-ல் மட்டும் 7.2 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.
மேலும்
உலகின் வயதான பெண் வலைப்பதிவாளர் மரணம்!
தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி 32% உயர்வு
நடுத்தர தொழில் வல்லுனர்களுக்கு உதவும் இணையதளம்
ஆஸ்ட்ரேலிய வங்கி ஐ.டி.பணிகள் இந்தியாவிற்கு!
குடியரசு துணைத் தலைவர் அலுவலக இணைய தளம்
மென்பொருள் ஏற்றுமதியில் டி.சி.எஸ். முதலிடம்!