முதன்மை பக்கம் > செய்திகள் > தகவல் தொழில்நுட்பம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலகின் அதிவேக கணினி-அமெரிக்கா சாதனை!  Search similar articles
அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் உலகின் அதிவேக கணினியை தயாரித்துள்ளது.

ஒரு வினாடியில் 1000 ட்ரில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணினி செய்து முடிக்கும் திறன் கொண்டது.

அமெரிக்க எரிசக்தித் துறையும் ஐ.பி.எம். நிறுவனமும் இந்த சூப்பர் கணினி பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

"ரோட்ரன்னர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கணினி, அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை பராமரிக்கவும், உலக எரிசக்தி நெருக்கடிகளை தீர்க்க உதவவும், மேலும் பல்வேறு அடிப்படை ஆராய்ச்சி மூலம் அறிவுத் துறையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று எரிசக்தி செயலர் சாமுயேல் போட்மேன் தெரிவித்தார்.

நியூ மெக்சிகோவில் உள்ள 'தி லாஸ் அலமோஸ் நேஷனல் பரிசோதனைக் கூடமும், ஐ.பி.எம். நிறுவனமும் இந்த அதிவேக உலக சாதனை கணினியை வடிவமைக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே!
சில்லரை வணிக நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் மென்பொருள்!
இணையம் வாயிலாக தங்க வர்த்தகம்!
‌'ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல்' ஃபார்மட்டிற்கு சர்வதேச தரச்சான்று!
2007 -ல் கணினி விற்பனை 65 லட்சம்!
3 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப பயிற்சி : என்.ஐ.ஐ.டி.!