வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » கட்டமைப்பு நிறுவனங்களுக்கு கடன்: வங்கிகளுக்கு சவால் (ndian Merchants' Chamber, Reserve Bank of India , Subbarao)
Bookmark and Share Feedback Print
 
அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு கடன் வழங்கும் போது வங்கிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறியுள்ளார்.

மும்பையில் இந்தியன் மெர்ச்சண்ட் சேம்பர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் பேசுகையில், உள்கட்டமைப்பு துறைக்கு கடன் வழங்குவது வங்கிகளுக்கு சவால் நிறைந்தது. வங்கிகளுக்கு நிதியை திரட்டும் பிரச்சனை மட்டுமல்லாது, கடன் கொடுக்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனத்தின் சொத்து- கடன் பற்றி கவனமாக ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் போது வங்கிகள் கடன் திரும்ப வசூலிப்பது பற்றியும், இதில் அடங்கியுள்ள இடர்பாடுகள் பற்றி திறமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த உள்கட்டமைப்புகளில் செய்த முதலீடு திரும்ப வர நீண்ட காலமாகும். இதில் நிதி ஆதாரங்களை குறுகிய காலத்திற்கு பயன் படுத்தினால், கடனுக்கும்- சொத்துக்கும் இடையே இடைவெளி ஏற்படும் என்று கூறினார்.

வங்கிகள் திறமையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கூறிய சுப்பாராவ், வங்கிகள் நிதி ஆதாரத்தை பயனுள்ள முறையில் பயன் படுத்திக் கொள்ளவில்லை. வட்டி விகிதம் குறையாமல் உள்ளது. ஒட்டுமொத்தமாக வங்கிகளின் திறன் அதிகரித்துள்ளது ஆனால் நிதி ஆதாரம் திறமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்