புது டெல்லி: , புதன், 25 நவம்பர் 2009( 15:26 IST )
சென்ன உட்பட 8 நகரங்களில் வருமானவரி தகராறு தீர்வு குழுக்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது .
2009 ஆம் வருடத்திய நிதி சட்டத்தால் சேர்க்கப்பட்ட 1961 ஆம் வருடத்திய வருமான வரி சட்டத்தின் 144-சி பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட தகராறுகள் தீர்வு குழுவின் நடமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை, மத்திய நேரடி வரிகள் வாரியம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் இம்மாதம் 20 ஆம் தேதியிலிருந்து நடமுறைக்கு வந்துள்ளன.
இந்த தீர்வு குழுக்கள் தில்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, புனே ஆகிய நகரங்களில் அமைக்கப்படவுள்ளன.
மாற்று விலை நிர்ணய பிரச்சினகள் உடைய எந்தவொரு வெளிநாட்டு கம்பெனியோ, அல்லது உள்நாட்டு கம்பெனியோ வரவு மதிப்பீட்டு உத்தரவை பெற்ற ஒரு மாத காலத்திற்குள் தகராறு தீர்வு குழுவுக்கு விண்ணப்பித்து உரிய நிவாரணம் பெறலாம்.
இந்த தகராறு தீர்வு குழு, மூன்று வருமான வரி ஆணையர்களக் கொண்ட குழுவாக அமையும். இந்த குழு வரி செலுத்துவோரின் குறைகள், சட்டப் பிரச்சினைகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.