நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து நான்கு வாரங்களாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், இது, சென்ற அக்டோபர் 30-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 112.90 கோடி டாலர் (ரூ.5,306.30 கோடி) சரிவடைந்து 28,439.10 கோடி டாலராக (ரூ.13,36,638 கோடி) குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், கையிருப்பு 68.40 கோடி டாலர் அதிகரித்து 28,552 கோடி டாலராக உயர்ந்து இருந்தது.
கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிராக, இதர நாட்டு செலாவணிகளின் மதிப்பு சற்று சரிவடைந்தது. அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பில் இவற்றின் பங்களிப்பு 40 சதவீதமாகும். இதே வாரத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டையும் அதிக அளவில் விலக்கி கொண்டன.
இதுபோன்ற காரணங்களால், அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு குறைந்துள்ளது.