வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன் சலுகை நீட்டிப்பு
Feedback Print Bookmark and Share
 
பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, வீட்டுக் கடனுக்கான சிறப்பு சலுகை திட்டத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு, அதாவது வரும் 2010-ஆம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்துள்ளது.

வீட்டு வசதிக்கான இந்த சிறப்பு கடன் திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி ரூ.5 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு, ஐந்து ஆண்டு காலத்திற்கு 8 சதவீத ஆண்டு வட்டியில் கடன் வழங்குகிறது. ரூ.50 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு முதல் ஆண்டில் 8 சதவீத வட்டியிலும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளிலும் 8.5 சதவீத வட்டியிலும் கடன் வழங்குகிறது. நான்காவது ஆண்டிலிருந்து வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.

இவ்வங்கி, தற்போது ரூ.1 கோடிக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.25-0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதன்படி, 15-45 தினங்கள் வரை முதிர்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 2.75 சதவீதத்திலிருந்து 2.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 181 தினங்கள் முதல் ஓர் ஆண்டு காலம் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்