மத்திய அரசுக்கு சொந்தமான மெட்டல் அண்ட் மினரல் டிரேடிங் கார்ப்பரேஷனின் பங்கு விலை நேற்று 20 விழுக்காடு அதிகரித்தது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த மூலதனத்தில் 10 விழுக்காடு பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்ய முடிவடுத்துள்ளது.
இதனையடுத்து பங்குச் சந்தையில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று மெட்டல் அண்ட் மினரல் டிரேடிங் கார்ப்பரேஷனின் பங்கு விலை 20 விழுக்காடு அதிகரித்தது. 1 பங்கின் விலை ரூ.36,146.85 ஆக அதிகரித்தது. 5200 பங்குகள் விற்பனையானது.
இந்த நிறுவனத்தில் பங்குகளில் அரசின் வசம் 99.33 விழுக்காடு பங்குகள் உள்ளன.
இதே போல் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் பங்கு விலையும் 14 விழுக்காடு அதிகரித்தது.