டிவிஎஸ் ஸ்ரீராம் வளர்ச்சி நிதியம் லேண்ட்மார்கில் முதலீடு

சென்னை,, சனி, 7 நவம்பர் 2009( 11:40 IST )
டிவிஎஸ் ஸ்ரீராம் வளர்ச்சி நிதியம் ரூ. 65 கோடி, லேண்ட்மார்க் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
லேண்ட் மார்க் நிறுனம் புத்தக அங்காடிகளை அமைத்து அதை லாபகரமாக செயல்படுத்திவருகிறது.
டிரென்ட் குழுமத்தின் அங்கமான லேண்ட்மார்க் புத்தக நிலையம் தற்போது 20 விற்பனை நிலையங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிகப் பெரிய அளவிலான விற்பனை நிலையங்களாகும். இந்நிறுவனம் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.
இது குறித்து டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கோபால் ஸ்ரீனிவாசன், சங்கிலித் தொடர் விற்பனை நிறுவனங்களில், அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும் நிறுவனமாக லேண்ட்மார்க் திகழ்வதால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ததாக தெரிவித்தார்.
இது டிவிஎஸ் ஸ்ரீராம் வளர்ச்சி நிதியம் செய்துள்ள முதலாவது முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 196 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது.