சொகுசு கார்களை தயாரிக்கும் ஆடி இந்தியா நிறுவனத்தின் கார்கள் அக்டோபரில் மாதத்தில் 116 விற்பனயாகி உள்ளது. இது சென்ற அக்டோபருடன் ஒப்பிடுகையில் 8.41 விழுக்காடு உயர்வு.
சென்ற அக்டோபரில் 107 கார்கள் விற்பனை ஆனது.
இது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பெனோட் டியர்ஸ் கூறுகையில், இந்த வருடம் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. மீண்டும் விற்பனை அதிகரிப்பதில் இருந்து, எங்கள் வளர்ச்சியை அறியலாம் என்று கூறினார்.
இந்த வருடம் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் மொத்தம் 1,449 கார்கள் விற்பனை ஆகி உள்ளன. சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் 884 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தது.