வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » இந்தோனேசிய நிறுவனங்களுக்கு அழகிரி அழைப்பு (chemical, petro chemical, petrolium, azahiri, indonasia)
Feedback Print Bookmark and Share
 
இந்தியாவில் பெட்ரோலியம், இரசாயனம், பெட்ரோ ரசாயனம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வருமாறு இந்தோனேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய உரங்கள்-இரசாயனத் துறை அமைச்சர் மு.க அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர், அந்நாட்டு தலைநகர் ஜகர்தாவில் நேற்று வர்த்தகர்களிடையே உரையாற்றும் போது, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காகவும், பெட்ரோலியம், இரசாயனம், பெட்ரோ இரசாயன துறைகளில் உலகளாவிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கவும் பெட்ரோலியம், இரசாயனம், பெட்ரோ இரசாயன முதலீட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை 250 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இதில் 40 விழுக்காடு சுத்திகரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதர இரசாயன பூங்காக்களைப் போலவே, இந்தப் பகுதி உற்பத்தி திட்டங்கள், பொது பயன்பாடுகள், சரக்குப் போக்குவரத்து, குடியிருப்புகள், நிர்வாக சேவைகள் ஆகியவை ஒருங்கிணைந் இருப்பதாக அமைந்திருக்கும்.ே

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இரசாயனம், பெட்ரோ இரசாயனப் பொருட்களின் நுகர்வு குறைவாகவே உள்ளது. எனினும், இந்தியாவில் இந்த துறையின் மேம்பாட்டிற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் துறையில் ஆண்டு உற்பத்தி சராசரியாக 35 பில்லியன் டாலர் அளவிற்கு உள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடாகும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தொழிற்சாலைகள் புதுமைகளை ஏற்படுத்துவதாகவும், பண்டக இரசாயனங்கள் மற்றும் சிறப்பு இரசாயனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு முதலீடுகள ஈர்ப்பதாகவும் அமந்ள்ளது.

அகமதாபாத்தில் அடுத்த மாதம் நடபெறவுள்ள இரசாயனம், வேளாண் இரசாயனம் தொடர்பான கண்காட்சி- மாநாட்டில் இந்தோனேசிய வர்த்தகர்கள் பங்கேற்க வேண்டும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் நடபெறவுள்ள இந்தியா கெம் கண்காட்சியிலும் இந்தோனேசியர்கள் பங்கேற்க வேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியாவில் ரசாயனம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் உள்ள வாய்ப்புகள எடுத்துக் கூறுவதாக அமையும்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியை மீறி, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6 முதல் 6.5 விழுக்காடாக உள்ளது. இது 8 முதல் 9 விழுக்காடு அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீடித்த வளர்ச்சியின் காரணமாக இரசாயனம் மற்றும் பெட்ரோ இரசாயனத் துறையில் இந்தியாவில் முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்று அழகிரி கூறினார்.


தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்