புது டெல்லி:, வியாழன், 5 நவம்பர் 2009( 18:05 IST )
ஹோன்டா சியோல் கார் நிறுவனம், இன்று கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ஹோன்டா அஸ்யூர் என்ற காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் ஹோன்டா கார் வாங்கியிருப்பவர்கள் எவ்வித கஷ்டமும் இன்றி, குறுகிய காலத்தில் இழப்பீடுக்கான நஷ்ட ஈடு பெற முடியும்.
இவை மையமாக அமைக்கப்பட்டுள்ள சர்வரி வழியாக கண்காணிக்கப்படும். இதனால் இந்த நிறுவனம் இழப்பீடு பற்றிய விபரங்களை கண்காணிக்க முடியும்.
இது குறித்து ஹோன்டா சியோல் கார் நிறுவனத்தின் தலைவர் டி.டகிடவா கூறுகையில், இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹோன்டா அஷ்யூர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இது வாடிக்கையாளர்கள் ஹோன்டா காரின் உரிமையாளர்களாக இருப்பதில் பெருமை அடையும் திட்டத்தின் பகுதியாகும்.
இந்த காப்பீடு திட்டம் முன்மாதிரியாக கடந்த ஒரு மாத காலமாக டெல்லி, டெல்லி தலைநகர் பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டது. கடந்த 1 மாதத்தில் மட்டும் 1,500 காப்பீடு பாலிசி செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
இந்த காப்பீடு திட்டத்திற்கு எஸ்.எம்.சி நிறுவனம் முகவராக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீடு திட்டத்தில் நேஷனல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, யூனிவர்சல் சாம்போ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஆகியவை பங்கேற்றுள்ளன.