சர்க்கரை ஆலைகள் கரும்புக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்: சரத்பவார்
புது டெல்லி:, வியாழன், 5 நவம்பர் 2009( 14:01 IST )
கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலை இறுதியானதல்ல. இதைவிட சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் நேற்று பேசும் போது கூறினார்.
இது தொடர்பாக கூடிய விரைவில் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்த சரத்பவார், சர்க்கரை ஆலைகள் குவின்டால் சர்க்கரையை ரூ.3 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யும் போது, நீங்கள் விவசாயிகளுக்கும் கரும்புக்கு அதிக விலை கொடுக்க வேண்டும். அப்படி அதிக விலை கொடுக்காவிட்டால், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கிடைக்காது என எச்சரித்தார்.
அவர் மேலும் பேசுகையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பை அதிகரிக்கவும், பணவீக்கத்தை குறைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்ககளை எடுத்துள்ளது.
2008-09 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 233.38 டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாமதமானதாலும், பருவ மழையின் அளவு குறந்ததாலும் 2009-01 ஆம் ஆண்டில் குறுவை பருவ உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சில மாநிலங்களில் அதிக அளவு பெய்த பலத்த மழை காரணமாகவும், இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
குறுவை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்பு, சம்பா பருவத்தில் ஈடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளையும் மீறி 15 மில்லியன் டன் நெல், 5.5 மில்லியன் பருப்பு வகைகள், 21 மில்லியன் டன் சிறு தானியங்கள், 2.5 மில்லியன் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறையும் என்று முதல்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு விலைகள் முக்கிய விஷயமாக உள்ளன. இதைத் தொடர்ந்து உணவு