மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், சென்னையில் நேற்று மகேந்திரா ரோடியோ, மகேந்திரா டியூரோ ஆகிய இரு பவர் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது.
மகேந்திரா ரோடியோ விலை ரூ.41 ஆயிரத்து 299. மகேந்திரா டியூரோ விலை ரூ. 38, 299.
இதன் அறிமுகவிழாவில் இருசக்கர வாகனப் பிரிவின் தலைவர் அனுப் மாத்தூர் பேசுகையில், இந்த ஸ்கூட்டர்களில் மகேந்திரா நிறுவனத்தின் வலிமையான ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திறன்கள், கடுமையான தரக் கட்டுப்பாடுகள், இத்தாலி இயந்திரங்களின் அமைப்பு உள்ளது என்று கூறினார்.