வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 23.31% உயர்வு (Mahindra and Mahindra)
Feedback Print Bookmark and Share
 
மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் அக்டோபர் மாதத்தில் 24,538 விற்பனை ஆகி உள்ளது. இது சென்ற அக்டோபருடன் ஒப்பிடுகையில் 23.31 விழுக்காடு அதிகம்.

சென்ற வருடம் அக்டோபரில் 19,899 வாகனங்களே விற்பனையாகி இருந்தன.

இதில் ஸ்கிராப்யோ, எக்ஸ்ஒய்எல்ஓ, பொலிரியோ ரக வாகனங்கள் 18,410 விற்பனை ஆகி உள்ளன. இது சென்ற அக்டோபருடன் ஓப்பிடுகையில் 32.11 விழுக்காடு அதிகம். ( சென்ற அக்டோபர் 13,935).

இதே போல் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இந்த அக்டோபரில் 1,132 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சென்ற அக்டோபருடன் ஓப்பிடுகையில் 161.43 விழுக்காடு அதிகம். ( சென்ற அக்டோபர் 433).

இது உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி சேர்த்து மொத்தம் 26,670 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

அதே நேரத்தில் இதன் லோகன் ரக வாகனத்தின் விற்பனை தொடர்ந்து குறைந்து உள்ளது. இந்த ரக வாகனம் 401 மட்டுமே விற்பனையாகி உள்ளது. ( சென்ற அக்டோபர் 1,067).



தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்