புது டெல்லி:, செவ்வாய், 3 நவம்பர் 2009( 18:10 IST )
ஹோன்டா சியல் இந்தியா நிறுவனம், அக்டோபர் மாதத்தில் கார் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் தயாரிப்புகள் அக்டோபர் மாதத்தில் 6,909 கார்கள் விற்பனை ஆகி உள்ளன.
இது சென்ற அக்டோபருடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு உயர்வு. சென்ற வருடம் அக்டோபரில் 1,546 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தன.
இது குறித்து ஹோன்டா சியல் கார் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணை தலைவர் ஜன்வீஸ்வர் சிங் கூறுகையில், பண்டிகை காலத்தில் கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள். புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தியாதால் விற்பனை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
இது உற்பத்தி செய்யும் கார்களில் சேடன் சிட்டி ரக கார் 5,219 விற்பனையாகியுள்ளது. ஜாஜ் ரக கார் 830, பிரிமியம் சேடன் சிவிக் 623, லக்சரி சேடன் அகார்ட் 280, சி.ஆர்-வி 47 விற்பனையாகி உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.