புது டெல்லி: , செவ்வாய், 3 நவம்பர் 2009( 13:25 IST )
யமாஹா மோட்டார் நிறுவனத்தின் இரண்டு சக்கர விற்பனை அக்டோபர் மாதத்தில் 44.40 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அக்டோபரில் 26,879 இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. ( சென்ற அக்டோபர் விற்பனை 18,614).
இது குறித்து இந்தியா யமாஹா மோட்டார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும்-தலைமை நிர்வலாக அதிகாரியுமான யுகிமினி டிசூஜி கூறுகையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருகிறது. பொருளாதார நெருக்கடி காலத்தில் கூட, யமாஹாவின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி இருப்பதுடன், எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
எங்களது தயாரிப்புகளில் எப்.இஜட் 16, பஜுர், ஆர் 15 ரகங்கள் அறிமுகப்படுத்தியதில் இருந்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே போல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கும் எப்.இஜ்ட்.எஸ், எப் 16, பஜுர் ஆகிய ரகங்களும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூறினார்.
இந்நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள் செப்டம்பரில் 26,394 விற்பனை ஆகி இருந்தது.