வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » ஹீரோ ஹோண்டா பைக் விற்பனை அதிகரிப்பு (Hero Honda Motors)
Feedback Print Bookmark and Share
 
ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த அக்டோபர் மாதம் 3,54,156 இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. ( சென்ற அக்டோபர் 3,52,449)

இது குறித்து ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு மூத்த உதவி தலைவர் அனில் துயா கூறுகையில், இந்த வருடம் விற்பனையை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தியுள்ளோம். இந்த பண்டிகை காலத்தில் சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

நாங்கள் விற்பனையாளர்களை அதிகப்படுத்துவதுடன், அடுத்த வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

ஹீரோ ஹோண்டா நிறுவனம் தொடந்து பத்து மாதமாக இதன் விற்பனையை மாதத்திற்கு மூன்று லட்சத்திற்கும் மேல் தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்