வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » சீனா: அமெரிக்க இரசாயண பொருட்களுக்கு குவிப்பு வரி (america, china, anti-dumping duty)
Feedback Print Bookmark and Share
 
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராசயண பொருட்களுக்கு சீனா 35 விழுக்காடு குவிப்பு வரி விதித்துள்ளது.

இதே போல் ஐரோப்பிய நாடுகள், தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அடிபிக் ஆசிட்டிற்கு 35.4 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை குவிப்புவரி விதித்துள்ளது. இந்த வரி ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இந்த அடிபிக் ஆசிட் பெரும்பாலும் நைலான் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. சில வகை மருந்து தயாரிக்கவும், உணவு பதப்படுத்தும் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக வர்த்தக துறையில் யுத்தம் நடந்து வருகிறது. அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மை, பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அத்துடன் சில பொருட்களுக்கு குவிப்பு வரி விதித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த தருணத்தில் சீனா அமெரிக்க இரசாயண பொருட்களுக்கு குவிப்பு வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்