வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » மலேசியா-இந்தியா வர்த்தகம் அதிகரிக்கும் (Malaysia,)
Feedback Print Bookmark and Share
 
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் அடுத்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மலேசியாவின் சர்வதேச வர்த்தகம்-தொழில் துறை அமைச்சர் முஸ்தபா முகமது பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 20 விழுக்காடு குறைந்தது. தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 10.5 பில்லியன் டாலராக உள்ளது. இது அடுத்த வருட தொடக்கத்திலேயே அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மலேசியாவைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன. இதே போல் இந்தியாவைச் சேர்ந்த 20 நிறுவனங்கள் மலேசியாவில் செயல்படுகின்றன என்று தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மலேசியா