அடானி என்டர்பிரைசஸ் நிறுவனம் போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. 1 பங்குக்கு 1 பங்கு என்ற விகிதாச்சாரத்தில் போனஸ் பங்குகள் வழங்கப்படும்.
இந்நிறுவனம் ஏற்கனவே 1996, 1999 ஆகிய வருடங்களில் போனஸ் பங்குகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் எதிராகால நிதி தேவை, தற்போது உள்ள கடனை அடைத்தல், நடப்பு முதலீடு தேவை ஆகியவைகளுக்கு ரூ.1,500 கோடி திரட்டும் வகையில் உரிமை பங்குகளை வெளியிட உள்ளது. இது பற்றிய விபரங்களை முடிவு செய்ய இயக்குநர்கள் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் சென்ற மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. அதில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.