சர்க்கரை விலை அதிகரிக்கால் இருக்க, நவம்பர் மாதத்திற்கு 17 லட்சத்து 14 ஆயிரம் சர்க்கரையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதில் சர்க்கரை ஆலைகள் வெளி சந்தை விற்பனைக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் டன் சர்க்கரையும், பொதுவிநியோக திட்டத்திற்கு 2 லட்சத்து 14 சர்க்கரையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் டன் சர்க்கரை யும் விற்பனைக்கு கிடைக்கும். அத்துடன் சர்க்கைர ஆலைகள் இறக்குமதி செய்து சுத்திகரித்த 1லட்சத்து 55 ஆயிரம் டன், அக்டோபர் மாத ஒதுக்கீட்டில் விற்பனை ஆகாமல் நிலுவையில் உள்ளவவை சேர்த்து வெளிச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.