வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » டயமண்ட் கேபிள் போனஸ் பங்கு (Diamond Cables)
Feedback Print Bookmark and Share
 
டயமண்ட் கேபிள் நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்குகிறது.

இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூன்று பங்குகளுக்கு 1 பங்கு என்ற விகிதத்தில் போனஸ் பங்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்துடன் பங்குகளாக மாற்றக்கூடிய 20 லட்சம் வாரண்டுகளை வெளியிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் விலை ரூ.210. இவை 18 மாதங்களில் 1 பங்காக மாற்றிக் கொள்ளலாம். இந்த வாரண்ட் பங்குகளாக மாற்றிய பிறகு, இதன் நிறுவனர்கள் வசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை 9.5 விழுக்காடாக அதிகரிக்கும். வாரண்டுகளை வெளியிடுவதன் மூலம் ரூ.42 கோடி முதலீடு திரட்டப்படும்.

இதன் பங்குநர்களின் கூட்டம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போனஸ் பங்கு, வாரண்டுகளுக்கு ஒப்புதல் வாங்கப்படும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: டயமண்ட் கேபிள்