முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > செஸ், கூடுதல் வரி நீக்கப்படாது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செஸ், கூடுதல் வரி நீக்கப்படாது
பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது போல், செஸ், கூடுதல் வரிகளை நீக்குவது சாத்தியம் இல்லை என்று திட்டக் கமிஷன் உறுப்பினர் சுமித்ரா சதுரி கூறினார்.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வியாழக் கிழமை மக்களவையில் தாக்கலசெய்த பொருளாதார ஆய்வறிக்கையில், பங்கு ஈவுத் தொகை மீது விதிக்கப்படும் வரி, பங்கு வர்த்தக வரி, பண்டக வர்த்தக வரி, பிரின்ஜ் பெனிபிட் வரி மற்றும் பல சஸ்டசார்ஜ், செஸ் போன்ற கூடுதல் வரிகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து திட்டக் குழு உறுப்பினர் சுமித்ரா சதுரி கூறுகையில், இது போன்ற வரிகள் விதிக்கப்படுகின்றன. இதை நீக்க வேண்டும் என்றால், இதன் உடனடி பாதிப்பு இருக்கும். அரசின் வரி வருவாய் குறையும். இதற்கு மாற்றாக வருவாயை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட நோக்கத்திற்காக செஸ், கூடுதல் வரிகள் விதிக்கப்படுகின்றன. அந்த நோக்கம் நிறைவேறியவுடன், அந்த வரிகளும் நீக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட சுமித்ரா சதுரி, வருவாய் குறைந்துவிடும் என்பதால், இந்த மாதிரியான வரியை அரசு நீக்க முன்வருவதில்லை. இந்த கூடுதல் வரிகள், தேவையான அளவிற்கும் அதிகமாக விதிக்கப்படுகின்றன.

தற்போது இவற்றை அரசு நீக்காது, எதிர்காலத்தில் நீக்கலாம் என்று கூறினார்.












தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ரயில்வே ரூ.40,745 கோடி திட்டம்
ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நிதியுதவி
ரயில்வே பட்ஜெட்: தொழில் துறை பாராட்டு
உயர் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய நிதிக்கொள்கை
808 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை
பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை