முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > ரயில்வே ரூ.40,745 கோடி திட்டம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரயில்வே ரூ.40,745 கோடி திட்டம்
ரயில்வே பட்ஜெட்டில், 2009-10 ஆம் நிதி ஆண்டில் ரூ.40,745 கோடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இடைக்கால பட்ஜெட் திட்ட மதிப்பீடை விட ரூ.2,840 கோடி அதிகமாகும்.

ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த நிதி ஆண்டில் ரயில்வே பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.40,745 கோடி செலவழிக்கும் என்று கூறினார்.

இதில் ரூ.15,675 கோடி ரயில்வேயின் உள்நிதி ஆதாரங்களை கொண்டு திரட்டப்படும். நிதி சந்தையில் ரூ.9,170 கோடி கடன்களின் மூலமாக திரட்டப்படும். இதற்காக வரி விலக்கு அளிக்கப்பட்ட கடன் பத்திரம் வெளியிடப்படும்.

புதிய இருப்பு பாதை போடுவதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ரூ.2,921 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மீட்டர் கேஜ் இருப்பு பாதையை, பிராட்கேஜ் பாதையாக மாற்ற இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருந்ததை விட, தற்போது கூடுதலாக 24 விழுக்காடு அதிகரிக்கப்பட்டது. தற்போது ரூ.1,750 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் ரூ.502 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 1,102 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 119 விழுக்காடு உயர்வு.

ரயில்வே ஊழியர்களின் நலனுக்கா இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருந்த நிதியும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர் குடியிருப்பு கட்டுவதற்காக ரூ.335 கோடி, மற்ற வசதிகளை மேம்படுத்த ரூ.424 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து வசதியை அதிகரிக்க, 11 திட்டங்களுக்காக நிதி அமைச்சகத்திடம் இருந்து ரூ.1949 கோடி ஒதுக்குமாறு பட்ஜெட்டில் கோரப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நிதியுதவி
ரயில்வே பட்ஜெட்: தொழில் துறை பாராட்டு
உயர் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய நிதிக்கொள்கை
808 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை
பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை
பரஸ்பர நிதி திட்டங்களில் முன்னேற்றம்: முதலீட்டு சந்தையில் வளர்ச்சிக்கான அறிகுறி