பொருளாதார நிலைத் தன்மையை வளர்த்துப் பாதுகாப்பதே பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மக்களவையில் தாக்கல் செய்த 2008-09 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையையில் பிரணாப் முகர்ஜி, மேம்பட்ட வளர்ச்சியை அடைவதற்கு, குறுகிய கால லாபம் தரக்கூடிய வகையில் நிதிக் கொள்கை அளவீடுகளை பயன்படுத்தத் திறமையான அணுகுமுறை வேண்டும்.
2008-09 ஆம் ஆண்டின் நிதிக் கொள்கை சில கடுமையான பொருளாதார சூழ்நிலை சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக அந்த ஆண்டின் பின்பகுதி முன்பாதியைவிட மிகவும் மாறுபட்டு இருந்தது. நாட்டின் வளர்ச்சிப் பாதையில் உலகளாவிய பொருளாதாரச் சிக்கலின் விளைவுகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகளின் காரணமாக ஆண்டின் இறுதி காலகட்டத்தில், சூழ்நிலை சற்றே மாறி நல்ல நிலைமைக்கு வந்தது.
பிந்தைய காலத்தில், மந்தமான பொருளாதார வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு 2009-10 ஆம் ஆண்டு நிதி விநியோக வளர்ச்சி 17.0 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வர்த்தக வங்கிகளில் வைப்பு விகிதம் 18 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் பொருளாதார வளர்ச்சிக்கு திரும்பும் வகையில், கடன் தரத்தைப் பாதுகாப்பதுடன், வாங்கக்கூடிய அளவுக்கு வட்டி விகிதத்தில் கடன் அளவு விரிவுபடுத்தப்படும். இதற்கு தகுந்தாற் போல் 2009-10 ஆண்டுக்கான நிதிக் கொள்கை இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |