மருந்து விலை கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளின் விலை அதிகரிக்காமல் கண்காணித்தால் போதுமானது என்று மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளை ஐந்து நிறுவனங்களே தயாரிக்கின்றன. இதன் விலை அதிகரிக்காமல் கண்காணித்தால் மட்டும் போதுமானது. மற்ற மருந்துகள் மீது உள்ள விலை கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், புதிய மருந்து கண்டு பிடிக்கப்பில் முன்னேற்றம் அடைந்து வலகின்றன. 34 புதிய மருந்துக்கான பரிசோதனைகள் நடந்து வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
முந்தைய அரசு தேசிய மருந்து கொள்கையை வகுத்தது. இதில் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் எண்ணிக்கையை 74 இல் இருந்து 354 ஆக அதிகரித்தது.
இதற்கு மருந்து தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிய மருந்து கண்டுபிடிப்பாக முயற்சி நின்று போய்விடும் என எச்சரித்தன.
எனவே, இந்த பிரச்சனை அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்த மருந்து கொள்கை அமல்படுத்தப் படவில்லை. |