முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > வெள்ளி விலையை குறைக்க வேண்டும்-நெசவாளர்கள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெள்ளி விலையை குறைக்க வேண்டும்-நெசவாளர்கள்
நெசவாளர்கள் வாங்கியுளள கடனை தள்ளுபடி செய்வதுடன், வெள்ளி விலையை குறைக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் கோரியுள்ளனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள், மக்களவை உறுப்பினர் பி.விஸ்வநாதனை சந்தித்து, தங்களின் கோரிக்கையை மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் எடுத்துரைக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, அப்போது அவர்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வெள்ளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சிபும் போன்ற நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியில் பட்டு நூல், ஜரிகை, சாய பொடி போன்ற நெசவுத் தொழிலுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடின்றி தாராளமாக கிடைக்கும் வகையில் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

மத்திய ஜவுளி மேம்பாட்டு கழகம் வழங்கும் உதவிகளை, நெசவாளர் சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டுமஎன்று தெரிவித்தனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
6 லட்சம் பேர் வேலை இழப்பு- பொருளாதார ஆய்வறிக்கை
வரி விதிப்பு குழப்பமாக உள்ளது-பொருளாதார ஆய்வறிக்கை
பட்ஜெட்: சுற்றுலா துறை வளர்ச்சிக்கு...
கோதுமை 249 லட்சம் டன் கொள்முதல்
விளைச்சலும் குறைவு, விலையும் குறைவு : பருத்தி விவசாயிகள் வேதனை
மியூச்சுவல் பண்ட் நுழைவு கட்டணம் ரத்து