முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > பட்ஜெட்: சுற்றுலா துறை வளர்ச்சிக்கு...
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பட்ஜெட்: சுற்றுலா துறை வளர்ச்சிக்கு...
ஹிமான்ஷீ சிங், மேலாண்மை இயக்குநர், டிராவல் சிட்டி இந்தியா
இந்தியாவின் சுற்றுலா போக்குவரத்து துறை, புதிய அரசிடம் இருந்து, இதன் வளர்ச்சிக்கு, சில சலுகைகளை எதிர்பார்க்கிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் பரிசீலித்து, பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.

சேவை வரியை மாற்ற வேண்டும்: இந்திய சுற்றுலாவின் சந்தை 50 பில்லியன் டாலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால், இதன் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிராவல் ஏஜென்டுகளுக்கு சேவை வரி விதிப்பதால், விமானம், விடுதி அல்லது கார் வாடகை போன்ற கட்டணங்கள் உயரும். இந்த வசதிகளை உரியவர்களிடம் இருந்து நேரடியாக பெறுவதைவிட, டிராவல் ஏஜெண்டுகளிடம் இருந்து பெற்றால் சேவை வரி காரணாக கட்டணங்கள் அதிகரிக்கும். சேவை துறைக்கே சேவை வரி விதித்து, டிராவல் ஏஜெண்டுகளை பாதிக்க விடலாமா ?

இரண்டாவாதாக டிராவல் கம்பெனிகள், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் சேவைக்கு, தற்போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமாக சேவை வரி விதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வழங்கும் டாலர், யூரோ போன்ற அந்நிய நாட்டு பணத்தை பொருத்து சேவை வரி மாறுபடுகிறது. இது குழப்பாமாக இருக்கிறது. எனவே இந்த சேவை வரியை குறைப்பதுடன், சிக்கல் இல்லாததாகவும் மாற்ற வேண்டும்.

பிரிஞ்ச் பெனிபிட் வரியை நீக்க வேண்டும்:சுற்றுலா துறைக்கு விதிக்கப்பட்ட பிரிஞ்ச் பெனிபிட் வரியை, அரசு படிப்படியாக குறைத்துள்ளது. சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக செய்யப்படும் அந்நிய நாடுகளின் பயண செலவு, உணவு-விடுதி செலவு போன்றவைகளுக்கு விதிக்கப்படும் பிரிஞ்ச் பெனிபிட் வரியும் நீக்க வேண்டும். சுற்றுலா, விமான போக்குவரத்து, விடுதிகள், சுற்றுலா பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பதற்கு பிரிஞ்ச் பெனிபிட் வரி நீக்கபட வேண்டியது அவசியம்.

விடுமுறை சலுகை: அரசு ஊழியர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை சலுகை, தற்போது உள்நாட்டு பயணத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்துள்ளதையும், பல சலுகைகள் வழங்கப்படுவதையும் கருத்தில் கொண்டு, இந்த சலுகையை அயல்நாடு பயணத்திற்கும் அனுமதிக்க வேண்டும்.

ஏஜெண்டுகள் கமிஷனுக்கு வருமான வரி: சுற்றுலா ஏஜென்டுகள் விற்பனை செய்யும் விமான டிக்கட்டுகளுக்கு குறைந்த அளவு கமிஷன் வழங்கப்படுகிறது. தற்போது 10 விழுக்காடு வருமான வரிக்காக முன்பிடித்தம் (டி.டி.எஸ்) செய்யப்படுகிறது. இது மிக அதிகமாகும். நிதி அமைச்சர், இதை கூடிய மட்டும் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இ- வர்த்தகம் அதிகரிக்க ஏற்றுமதி சார்ந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, இ-காமர்ஷ் எனப்படும் இணையதளம் வாயிலான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும். இதனை வடிவமைக்கும் திட்டத்தையும், அமல்படுத்துவதற்கும் மத்திய அரசு, தனியார் நிறுவனங்கள், அரசு துறைகள் இணைந்த குழுவை அமைக்க வேண்டும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கோதுமை 249 லட்சம் டன் கொள்முதல்
விளைச்சலும் குறைவு, விலையும் குறைவு : பருத்தி விவசாயிகள் வேதனை
மியூச்சுவல் பண்ட் நுழைவு கட்டணம் ரத்து
பட்ஜெட்: மின்உற்பத்திக்கு வரி சலுகை வேண்டும்
வறட்சியை தாங்கும் பயிர்களை பயிரிடுங்கள்-விவசாயிகளுக்கு அறிவுரை
ஏற்றுமதி குறைந்தது