முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > கோதுமை 249 லட்சம் டன் கொள்முதல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கோதுமை 249 லட்சம் டன் கொள்முதல்
மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் இருந்து 249 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்துளளது. மத்திய அரசின் வசம் போதிய கோதுமை கையிருப்பில் உள்ளது.

இந்த ஆண்டு பிகார் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் கோதுமை கொள்முதல் செய்யும் பணி நிறைவு பெற்று விட்டது. இது வரை 248.80 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 226.89 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த வருடம் கோதுமை உற்பத்தி அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.1,080 ஆக மத்திய அரசு அறிவித்தது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் கோதுமை சாகுபடி செய்தனர். மேலும் பருவநிலை சாதகமாக அமைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை.

கோதுமை ஏப்ரல் முதல் ஜுன் வரை அதிக மூன்று மாதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கோதுமை, wheat
மேலும்
விளைச்சலும் குறைவு, விலையும் குறைவு : பருத்தி விவசாயிகள் வேதனை
மியூச்சுவல் பண்ட் நுழைவு கட்டணம் ரத்து
பட்ஜெட்: மின்உற்பத்திக்கு வரி சலுகை வேண்டும்
வறட்சியை தாங்கும் பயிர்களை பயிரிடுங்கள்-விவசாயிகளுக்கு அறிவுரை
ஏற்றுமதி குறைந்தது
வருமான வரி தாக்கல்: பழைய முறையே தொடரலாம்