முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அந்நிய நேரடி முதலீடு 2457 கோடி டாலர்
இந்தியாவில் சென்ற நிதி ஆண்டில் (2007-08) 2,457 கோடி டாலர் வந்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடுகளை பெறுவதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. (சீனமுதலிடத்தில் உள்ளது). சென்ற நிதி ஆண்டில் இந்தியாவில் 2,457 கோடி டாலர் அந்நிய முதலீட்டு மற்றும் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இது முந்தைய நிதி ஆண்டைவிட 1570 டாலர் அதிகம். (56.50 விழுக்காடு).

அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது இல்லாமல், தொழி‌ற்சாலை தொடங்குவது போன்றவைகளில் நேரடியாக முதலீடு செய்கின்றன. இவை நீண்டகால முதலீடாக இருக்கும்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8.7 விழுக்காடாக இருந்ததால், சென்ற நிதி ஆண்டில் இரண்டு மடங்கு அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளது.

இந்த நிதி ஆண்டில் 3,500 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறும் போது, அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு இந்தியா ஏற்ற இடமாக உள்ளது. இந்த முதலீடு அதிகரித்திருப்பது, அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில், இந்தியாவின் மீது உள்ள நம்பிக்கை அதிகரிப்பதையே எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார்.
மேலும்
ரூ.308 கோடி அந்நிய நேரடி முதலீடு அனுமதி!
வங்கி பரிமாற்ற வரி நீக்கம் - சிதம்பரம்!
ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதிக்கு அனுமதி!
பணவீக்கம் உயர்வு!
வெளியீட்டு விலையை விட விலை குறைந்த பங்குகள்!
மைதா, ரவை விலை உயரும்!