முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உருக்கு விலை உயர்வு
பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் உருக்கு, இரும்பு, கம்பி, தகடு உட்பட எல்லா ரகங்களின் விலைகளையும் டன்னுக்கு ரூ.6 ஆயிரம் உயர்த்தியுள்ளது.

உருக்கு, இரும்பு விலை குறைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினம் உருக்காலையின் துணை நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் விலையை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மற்ற உருக்கு நிறுவனங்கள் விலையை உயர்த்தின. ஆனால் செயில் என்று அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரட்டி ஆப் இந்தியா லிமிடெட், விலையை உயர்த்தவில்லை. இப்போது ராஷ்டிரிய இஸ்பாட் விலை உயர்த்தியுள்ளதால், இது செயிலும் விலையை உயர்த்த வழிவகுக்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே சென்ற வாரத்தில் ஜே.எஸ்.டபிள்யூ, இஸ்பாட்,எஸ்ஸார், டாடா ஸ்டீல் ஆகிய உரு‌க்கு நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடு!
வாட் வரி உயர்வு இல்லை
ஆலிவ் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு!
இ‌ன்று தெலுங்கு வருட பிறப்பு: சமையல் எண்ணெய் சந்தை விடுமுறை!
அந்நிய நேரடி முதலீடு 210 பில்லியன் டாலர்!
பணவீக்கம் 7 விழுக்காடாக உயர்வு!