வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » சந்தை நிலவரம் » நிஃப்டி 18-சென்செக்ஸ் 68 புள்ளி உயர்வு (sensex, nifty)
Bookmark and Share Feedback Print
 
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், சில நிமிடங்களிலேயே அதிகரித்தன. தொடர்ந்து அதிகரித்து வந்த குறியீட்டு எண்கள் நண்பகலுக்கு பிறகு குறைய துவங்கியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 67.87 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 17,198.95 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 17.60 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5108.15 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 07.48, சுமால் கேப் 12.44 புள்ளிகள் குறைந்தது. ஆனால் பி.எஸ்.இ-500 20.26 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், மருந்துவ நிறுவனங்கள், நுகர்போர் பொருட்கள், தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகள் தவிர மற்றவைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1290 பங்குகளின் விலை அதிகரித்தது. 1486 பங்குகளின் விலை குறைந்தது. 73 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சென்செக்ஸ், நிஃப்டி