மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவு அதிகரித்தது. இன்று ஆபரணத் தங்கத்த்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.17,710 ஆக அதிகரித்தது.
இன்றுடன் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பார் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 50 அதிகரித்தது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.29,285 ஆக உயர்ந்தது.
இன்று காலை விலை நிலவரம்
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.17,800 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.17,710 பார் வெள்ளி கிலோ ரூ.29,285.