ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மட்டும் கிராமிற்கு ரூ.16 உயர்ந்து வரலாற்று காணா அளவிற்கு கிராம் விலை ரூ.1745 ஆக உயர்ந்துள்ளது!
மும்பை தங்கச் சந்தையில் இன்றும் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்தன. நகை செய்யவும், விற்கவும் மிக அதிக அளவிற்கு தங்கம் வாங்கப்பட்டதால் விலையேற்றம் தொடருவதாக மும்பை தங்கச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளியின் விலை இன்று மேலும் உயர்ந்தது. கிலோவிற்கு ரூ.335 உயர்ந்து ரூ.29,190.00ஐ எட்டியுள்ளது. மும்பை தங்கம் வெள்ளி விலை நிலவரம்;
வெள்ளி (ஒரு கிலோ கிராம்) ரூ.29.190.00 (நேற்றைய விலை; ரூ.28,855.00) தங்கம் (99.5) 10 கிராம்: ரூ.17,455.00 (17,295.00) தங்கம் (99.9) 10 கிராம்: ரூ.17,540.00 (17,380.00)