வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » சந்தை நிலவரம் » நிஃப்டி 55-சென்செக்ஸ் 152 புள்ளி உயர்வு (sensex, nifty)
Feedback Print Bookmark and Share
 
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், மதியம் 2 மணி அளவில் அதிகரிக்க துவங்கின. சிறிது பாதிப்பு இருந்தாலும் தொடர்ந்து அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 4610.60 புள்ளிகள் வரை குறைந்தது. அதே போல் 4776.35 வரை அதிகரித்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 151.77 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 16,063.90 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.75 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,765.55 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 121.04, பி.எஸ்.இ-500 87.48, சுமால் கேப் 125.32 புள்ளிகள் அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில் நுட்பம், நுகர்போர் பொருட்கள் உற்பத்தி பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1827 பங்குகளின் விலை அதிகரித்தது. 841 பங்குகளின் விலை குறைந்தது. 77 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சென்செக்ஸ், நிஃப்டி