மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிது பாதிப்பு இருந்தாலும் தொடர்ந்து அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4700 க்கும் அதிகரித்தது.
கடந்த ஆறு நாட்களாக இருந்து வந்த நிலை, இன்று மாறியது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று பொருளாதார ஊடக ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசும் போது, தொழில்-வர்த்தக துறைக்கு அரசு அறிவித்துள்ள சிறப்பு சலுகை தற்சமயம் திரும்ப பெற மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். இது பங்குச் சந்தையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியாதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 507.19 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 15,912.13 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 146.90 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,710.80 ஆக உயர்ந்தது.
மிட் கேப் 204.91, பி.எஸ்.இ-500 187.28, சுமால் கேப் 147.29 புள்ளிகள் அதிகரித்தது.
இன்றைய வர்த்தகத்தில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1774 பங்குகளின் விலை அதிகரித்தது. 946 பங்குகளின் விலை குறைந்தது. 59 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.