டாலர் மதிப்பு சரிவு

மும்பை: , புதன், 4 நவம்பர் 2009( 10:31 IST )
மும்பை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலை மாறியது. இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
காலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்தது.
காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் விலை ரூ.47.18 ஆக குறைந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 22 பைசா குறைவு.
நேற்று டாலரின் மதிப்பு 44 பைசா அதிகரித்து, மாலையில் 1 டாலரின் மதிப்பு ரூ. 47.40 ஆக முடிந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், அந்நிய முதலீடு வரலாம் என்பதால் டாலரின் மதிப்பு குறைந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.