மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இரண்டாவது நாளாக இன்று தங்கத்தின் விலை அதிகிரத்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்தது. நேற்றும் தங்கத்தின் விலை ரு.100 அதிகரித்தது.
அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளிலும், லண்டன் சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை இதுவரை இல்லாத அளவு அதிகரித்தது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,061.00/1,062.00 டாலராக அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை அவுன்ஸ் 16.55/16.57 டாலராக இருந்தது.
இன்று காலை விலை நிலவரம்
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.16,325 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.16,235 பார் வெள்ளி கிலோ ரூ.26,790.