மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள், சிறிது நேரத்திலேயே, நேற்றைய இறுதி நிலவரத்தைவிட உயர்ந்தது. நண்பகல் 2 மணிக்கு பிறகு உயர தொடங்கியது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,400 ஐ தாண்டியது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 254.56 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 14,913.05 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75.40 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,424.25 ஆக உயர்ந்தது.
மிட் கேப் 42.95, சுமால் கேப் 24.71, பி.எஸ்.இ 500-83.46 புள்ளிகள் அதிகரித்தன.
இன்றைய வர்த்தகத்தில், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1341 பங்குகளின் விலை அதிகரித்தது. 1263 பங்குகளின் லை குறைந்தது. 82 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. |