மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், ஒரே நிலையாக இல்லாமல், அதிக மாற்றத்துடன் இருந்தது.
ஒரு நிலையில் நிஃப்டி 4379 ஆக உயர்ந்தது. இதற்கு நேர் மாறாக 4293 வரை குறைந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 13.02 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 14,658.49 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 7.95 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,348.85 ஆக உயர்ந்தது.
மிட் கேப் 16.76, சுமால் கேப் 42.82, பி.எஸ்.இ 500-12.81 புள்ளிகள் அதிகரித்தன.
இன்றைய வர்த்தகத்தில், வாகன உற்பத்தி, வங்கி, நுகர் பொருட்கள் பிரிவு தவிர, மற்றவைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1459 பங்குகளின் விலை அதிகரித்தது. 1141 பங்குகளின் லை குறைந்தது. 92 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. |