வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்தது.
இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலரின் விலை ரூ.47.74 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 15 பைசா குறைவு.
நேற்று டாலரின் இறுதி விலை ரூ.47.89 பைசா.
மற்ற நாட்டு அந்நிய செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு குறைந்தது. அத்துடன் வங்கிகள் டாலரை விற்பனை செய்கின்றனர். ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை நிலவுகிறது. இதனால் அந்நிய முதலீடு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவையே டாலரின் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இன்று மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதனை பொறுத்து பங்குச் சந்தையிலும், அந்நிய செலவாணி சந்தையிலும் நிலவரங்கள் இருக்கும். |