பங்குச் சந்தைகளில் காலையில் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் சில நிமிடங்களிலேயே குறைந்தது. காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 12, நிஃப்டி 7 புள்ளிகள் குறைந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாட்டு பங்குச் சந்தைகள் உயர்ந்தாலும், இந்திய பங்குச் சந்தையில் பட்ஜெட் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நைஜிரியாவில் உள்நாட்டு கலவரத்தால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சென்ற சில தினங்களாக பீப்பாய் 70 டாலர் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டம் குறையும். இன்று இந்த பிரிவு பங்குகள் மீது, முதலீட்டாளர்களின் கவனம் திரும்பும்.
ஆசியாவில் இன்று காலை, சில பங்குச் சந்தைகளில் சாதகமாகவும், சிலவற்றில் பாதகமாகவும் இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 146.80, இலங்கை 05.43, இந்தோனிஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 13.42, தைவான் வெயிட் 70.94, சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 27.06, புள்ளிகள் அதிகரித்தன.
சிங்கப்பூரின் ஸ்டெர்ட் டைம்ஸ் 09.10, ஜப்பானின் நிக்கி 17.08, சியோல் காம்போசிட் 04.72, புள்ளிகள் குறைந்தன.
ஐரோப்பிய நாடுகளில் நேற்று, இத்தாலி தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-91.50 புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று, டோவ்ஜோன்ஸ் 57.06, எஸ்&பி 500-04.01, நாஸ்டாக் 10.68 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 10.20 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.35 (NSE-nifty) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,340.90 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 72.79 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 14,572.68 ஆக சரிந்தது. மிட் கேப் 0.57, 34.68, பி.எஸ்.இ 500-15.22 புள்ளிகள் குறைந்தது. ஆனால் சுமால் கேப் 26.19 புள்ளிகள் குறைந்தது.
இருப்பினும் இன்று பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்கள் போலவே, அதிக மாற்றத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.22 மணியளவில் 836 பங்குகளின் விலை அதிகரித்தும், 673 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 44 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
பங்குச் சந்தைகளில் நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.185.58 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.76.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
|