மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே குறைய தொடங்கின. காலை 11 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறைந்தது. பிறகு மீண்டும் அதிகரித்தது. ஆனால் நாள் முழுவதும் அதிக மாற்றத்துடன் இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 151.63 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 14,645.47 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 49.80 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,340.90 ஆக உயர்ந்தது.
மிட் கேப் 51.17, சுமால் கேப் 17.38, பி.எஸ்.இ 500-58.32 புள்ளிகள் அதிகரித்தன.
இன்றைய வர்த்தகத்தில், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1255 பங்குகளின் விலை அதிகரித்தது. 1339 பங்குகளின் லை குறைந்தது. 79 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. |