இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,363.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,096.62 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.41,585.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.29,037.99 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவு 3.80%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.65%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 3.80%, மின் உற்பத்தி பிரிவு 0.66%, வாகன உற்பத்தி பிரிவு 1.05%, உலோக உற்பத்தி பிரிவு 4.36%, ரியல் எஸ்டேட் 0.39% அதிகரித்தது.
பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 0.95%, வங்கி பிரிவு 0.0.06% குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 37 பங்குகளின் விலை அதிகரித்தது. 13 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 34 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 16 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது. 7 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி மிட் கேப் 50 பிரிவில் உள்ள 50 பங்குகளில் 35 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் மாற்றம் இல்லை.
|