முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்வு!
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குகளின் விலைகளில் அதிக அளவு மாற்றம் இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங் தவிர மற்றவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் நேற்று பின்னடைவு இருந்தது. இன்று ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 225.49 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 16,978.35 ஆக உயர்ந்தது. .

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 53.95 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 5011.75 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1425 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,239 பங்குகளின் விலை குறைந்தது, 86 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 33, சுமால் கேப் 36.78, பி.எஸ்.இ. 500- 75.65 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 85.95, சி.என்.எக்ஸ். ஐ.டி 168,
சி.என்.எக்ஸ்.100- 51.30, சி.என்.எக்ஸ். 500- 39.80, சி.என்.எக்ஸ். மிட் கேப் 59.45, மிட் கேப் 50- 46.40 புள்ளி அதிகரித்தது.

ஆனால் பாங்க் நிஃப்டி 16.10, சி.என்.எக்ஸ். டிப்டி 5.50 புள்ளி குறைந்தது.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,990.62, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,916.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
1 | 2  >>  
மேலும்
தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌‌விலை ‌நிலவர‌ம்!
சென்செக்ஸ் 108 புள்ளிக‌‌ள் சரிவு!
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
கடலைபயறு விலை உயர்வு!