முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பு!
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

வர்த்தகர்கள் அதிக அளவு தங்கம், வெள்ளியை வாங்கியதாலும், அயல் நாட்டு சந்தையில் விலை அதிகரித்த காரணத்தினால், இங்கும் விலை அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அயல்நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலையடுத்து, வர்த்தகர்கள் தங்கம் வெள்ளி வாங்கியதாக, முன்னணி வர்த்தகர் தெரிவித்தார்.

இன்று மும்பையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.100ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.245 அதிகரித்தது.

அயல்நாட்டு சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது.

நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 882.10/883.10 டாலராக அதிகரித்தது. புதன் கிழமை இறுதி விலை 881.40/882.60 டாலர்.

அதே போல் வெள்ளியின் 1 அவுன்ஸ் 16.87/16.63 டாலராக குறைந்தது. அதிகரித்தது. முந்தைய நாள் விலை 16.85/16.91.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,905
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,850
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,365
மேலும்
கடலை எண்ணெய் விலை உயர்வு!
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
சென்செக்ஸ் இன்று 259 புள்ளிகள் சரிவு!
தங்கம் வெள்ளி விலை உயர்வு!
கடலை எண்ணெய் விலை உயர்வு!