விளைச்சல் அதிகமாக உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சாம்பார் வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது என்று வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
தமிழகத்தில் ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சாம்பார் வெங்காயம் அதிகமாக விளைகிறது. தற்போது அங்கு விளைச்சல் அதிகமாக உள்ளதால் சென்னை கோயம்பேட்டுக்கு வரும் சாம்பார் வெங்காயம் அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ.5 குறைந்து ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு 100 முதல் 150 லாரிகள் வரும். தற்போது 200 முதல் 250 லாரிகள் வருகின்றன. இந்த விலை இன்னும் குறையும் என்று செளந்தரராஜன் மேலும் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
தேங்காய் ரூ.07 கோஸ் ரூ.04 கேரட் ரூ.12, 13 பீட்ரூட் ரூ.06 சவ்சவ் ரூ.08 நூக்கோல் ரூ.15 முள்ளங்கி ரூ.10 வெள்ளரிக்காய் ரூ.07 பீன்ஸ் ரூ.25 கத்திரிக்காய் ரூ.07 அவரைக்காய் ரூ.15 புடலங்காய் ரூ.10 வெண்டைக்காய் ரூ.10 மிளகாய் ரூ.16 குடை மிளகாய் ரூ.25 முருங்கக்காய் ரூ.25 இஞ்சி ரூ.30 சேனைக் கிழங்கு ரூ.10 சோம்பு ரூ.16 உருளைக்கிழங்கு ரூ.09 கோவக்காய் ரூ.10 பட்டாணி ரூ.40 சுரக்காய் ரூ.04 நாட்டு தக்காளி ரூ.15 பெங்களூர் தக்காளி ரூ.16 பூசணி ரூ.06 நாசிக் வெங்காயம் ரூ.07 சாம்பார் வெங்காயம் ரூ.15 மாங்காய் ரூ.06 பீர்க்கன்காய் ரூ.10 பாகற்காய் ரூ.10 காலிபிளவர் (ஒன்று) ரூ.06 பரங்கிகாய் ரூ.06
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.148 இந்தியன் ஆப்பிள் ரூ.72 வாஷிங்டன் ஆப்பிள் ரூ.90 நாக்பூர் ஆரஞ்சு ரூ.50 நாவல் ஆரஞ்சு ரூ.60 சாத்துக்குடி ரூ.26 கொய்யா ரூ.18 கருப்பு திராட்சை ரூ.20 பச்சை திராட்சை ரூ.50 கணேஷ் மாதுளை ரூ.33 காபூல் மாதுளை ரூ.45 செவ்வாழைப்பழம் ரூ.24 கற்பூரவள்ளி ரூ.14 ரஸ்தாளி ரூ.17 பச்சை வாழைப்பழம் ரூ.12 பப்பாளி ரூ.08 சப்போட்டா ரூ.20 கிரினி பழம் ரூ.10 தர்பூசணி ரூ.6.50 நேந்திரம் பழம் ரூ.22 பகனப்பள்ளி மாம்பலம் ரூ.25 செந்துரா மாம்பலம் ரூ.16 அப்போன்சா மாம்பலம் ரூ.40 அத்திப்பழம் ரூ.36
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.60 முல்லை ரூ.100 கனகாமரம் ரூ.180 சம்பங்கி ரூ.60 100 ரோஸ் ரூ.15 குயின் ரோஜா (100 பூ) ரூ.20 கோழி கொண்டை ரூ.30 வாடா மல்லி ரூ.30 செண்டு பூ ரூ.30 அரளி பூ ரூ.30
|