விளைச்சல் அதிகமாக உள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக விலை உயர்ந்திருந்த தக்காளி கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. மேலும் இந்த விலை குறையும் என்று கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்திரராஜன் கூறினார்.
நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்றது தற்போது ரூ.5 குறைந்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் கேரட், சவ்வவ், நூக்கோல், அவரைக்காய் முருங்கக்காய் கிலோவுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கோடை வெயில் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று செளந்திரராஜன் மேலும் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
தேங்காய் ரூ.08 கோஸ் ரூ.04 கேரட் ரூ.15 பீட்ரூட் ரூ.06 சவ்சவ் ரூ.15 நூக்கோல் ரூ.13 முள்ளங்கி ரூ.10 வெள்ளரிக்காய் ரூ.07 பீன்ஸ் ரூ.15 கத்திரிக்காய் ரூ.05 அவரைக்காய் ரூ.20 புடலங்காய் ரூ.10 வெண்டைக்காய் ரூ.10 மிளகாய் ரூ.12 குடை மிளகாய் ரூ.50 முருங்கக்காய் ரூ.40 இஞ்சி ரூ.30 சேனைக் கிழங்கு ரூ.10 உருளைக்கிழங்கு ரூ.08 கோவக்காய் ரூ.08 பட்டாணி ரூ.50 சுரக்காய் ரூ.03 நாட்டு தக்காளி ரூ.15 பெங்களூர் தக்காளி ரூ.16 பூசணி ரூ.07 நாசிக் வெங்காயம் ரூ.07 சாம்பார் வெங்காயம் ரூ.20 மாங்காய் ரூ.06 பீர்க்கன்காய் ரூ.10 பாகற்காய் ரூ.10 காலிபிளவர் (ஒன்று) ரூ.06 பரங்கிகாய் ரூ.06
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.180 இந்தியன் ஆப்பிள் ரூ.70 வாஷிங்டன் ஆப்பிள் ரூ.92 நாக்பூர் ஆரஞ்சு ரூ.50 நாவல் ஆரஞ்சு ரூ.60 சாத்துக்குடி ரூ.25 கொய்யா ரூ.18 கருப்பு திராட்சை ரூ.18 பச்சை திராட்சை ரூ.55 கணேஷ் மாதுளை ரூ.35 காபூல் மாதுளை ரூ.45 செவ்வாழைப்பழம் ரூ.25 கற்பூரவள்ளி ரூ.15 ரஸ்தாளி ரூ.19 பச்சை வாழைப்பழம் ரூ.12 பப்பாளி ரூ.09 சப்போட்டா ரூ.20 கிரினி பழம் ரூ.12 தர்பூசணி ரூ.07 நேந்திரம் பழம் ரூ.22 பகனப்பள்ளி மாம்பலம் ரூ.25 செந்துரா மாம்பலம் ரூ.18 அப்போன்சா மாம்பலம் ரூ.40 அத்திப்பழம் ரூ.35
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.80 முல்லை ரூ.100 கனகாமரம் ரூ.200 சம்பங்கி ரூ.60 100 ரோஸ் ரூ.20 குயின் ரோஜா (100 பூ) ரூ.20 கோழி கொண்டை ரூ.30 வாடா மல்லி ரூ.30 செண்டு பூ ரூ.30 அரளி பூ ரூ.30
|