முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்வு!
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்திருந்த குறியீட்டு எண்கள் சிறிது நேரத்திலேயே அதிகரிக்க துவங்கின.

அதிக ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவு மட்டும் சிறிது குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தை , ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் இன்று சாதகமான போக்கு நிலவியது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 112.54 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,807.64 ஆக அதிகரித்தது.

ி.எஸ்.இ. 500- 52.97,சுமால் கேப் 50.37, மிட் கேப் 44.26 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 44.80 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 4777.60 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 36.75, சி.என்.எக்ஸ்.100- 39.90, சி.என்.எக்ஸ்.டிப்டி 39.85, சி.என்.எக்ஸ். 500- 30.95, சி.என்.எக்ஸ். மிட் கேப் 46.20, சி.என்.எக்ஸ் மிட் கேப்50-17.15 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி 1.25, பாங்க் நிஃப்டி 38.40 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,637 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,050 பங்குகளின் விலை குறைந்தது. 62 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.47%, வங்கி பிரிவு 0.64%,

தொழில்நுட்ப பிரிவு 1.27%, உலோக உற்பத்தி பிரிவு 0.55%, வாகன உற்பத்தி பிரிவு 0.33%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.29%,, ரியல் எஸ்டேட் 0.29% குறைந்தன.

பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.82%, மின் உற்பத்தி பிரிவு 2.08%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.61% அதிகரித்தன.
மேலும்
தங்கம், வெள்ளி விலை சரிவு!
சென்னை: எண்ணெய் விலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
பங்குச் சந்தை: சென்செக்ஸ் 95 புள்ளிகள் சரிவு!
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை: எண்ணெய் விலை நிலவரம்!